சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், இந்த போராட்டம் வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (28) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கூடிய ஒரு விடயம்.
அதன்படி போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்கும். அத்துடன் போராட்டம் வெற்றிபெற அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
