ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு- முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் குரவில் உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி தர்சன் என அணியலாம் காணப்பட்டுள்ளது.

விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்தவர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்குப் பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இது குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply