முன்னாள் அமைச்சர் ராஜித நீதிமன்றில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றும் ஒரு வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply