யாழ்ப்பாணத்தில் அரச பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு பயணிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் யாழ் அரச பேருந்து சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தார்.
அரச பேருந்து சாலை அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சு வார்த்தை மூலம் ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண இளங்குமரன் எம்.பி முயற்சித்தார்.
இதன் விளைவாக இன்று (29) காலை 10:00 மணியளவில் அரச பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் அனைத்து அரச பேருந்து சேவைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
