களனிப் பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவி- 04 மாணவர்கள் கைது!

களனிப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறையின் பொது புகார்கள் புலனாய்வுப் பிரிவினரால், 04 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லவாய, ஹபராதுவ, வவுனியா மற்றும் மஹகிரில்ல பகுதிகளில் வசிக்கும் 26 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் புகைப்படம் எடுத்தல், வாகன பொறியியல் மற்றும் திரைப்பட இயக்கம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரியவந்துள்ளது.

ஏழு சிரேஷ்ட மாணவர்கள் குறித்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, காலையில் சிறைபிடித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply