முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராஜிதாவை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில், அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க. எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
