வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரருக்கு விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ‘அபே ஜன பல’ கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்காக கட்சியின் பொதுச் செயலாளரான வண. வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு அவரது கையொப்பம் பலவந்தமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் ரதன தேரருக்கு ஆசனம் பெறுவதற்கு வழிவகுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன்படி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCD) கோரிக்கையை அடுத்து, நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 18ஆம் திகதி இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனையடுத்து வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply