முன்னாள் எம்.பி நிமல் லன்சாவுக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒன்றின் போது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் முன்னாள் எம்.பி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த போது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply