முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினாலும், மருத்துவ ஆலோசனையின்படி அவர் வீட்டிலேயே ஓய்வெடுப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ரணில் விக்ரமசிங்க வீட்டில் தங்கியிருக்கும் போது அவரது உடல்நிலையை குடும்ப வைத்தியர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply