சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்ற அதேவேளையில், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள். ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
