அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கட்டுகுருந்த கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் இருப்பதை அவதானித்து 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்படி களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

கடற்கரையில் குப்புற விழுந்து தலை மண்ணிற்குள் மூடிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், கருப்பு நிற நீண்ட கால்சட்டை, பெல்ட் மற்றும் வெள்ளை டி-செட் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

இறந்தவரின் அடையாளம் தொடர்பில் என்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சப்பவும் குறித்து மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply