அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறை- இன்று முதல் அமுலில்!

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

எனினும் ஆசனப்பட்டி இல்லாத சில வாகனங்களுக்கு ஆசனப்பட்டியை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply