முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று அவரை முன்னிலையாக வேண்டாம் என அறிவிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு, சமன் ஏக்கநாயக்க முன்னரே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
