கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கொழும்பில் கைது!

கொழும்பில் அதிகளவு பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாகக் கூறி ஒருவர் ஹேஷ் போதைப்பொருட்களை கடத்துவதாகக் கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பணியகத்தின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 1.05 கிலோ கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 100,000 ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இரத்மலானை பகுதியில் மாதந்தோறும் 30,000 ரூபாய் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வீட்டில் இருந்து இந்தக் கடத்தல் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டைச் சோதனையிட்ட வேளையில் ​​மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்ட அதேநேரம், அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply