யாழ் வருகை தந்துள்ள ஜனாதிபதி- ஆரம்பித்து வைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்றையதினம் (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன்படி யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி முதற்கட்டமாக மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஜனாதிபதி அவர்களால் இந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் முதலான பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply