செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மயிலிட்டியில் இன்றையதினம் (01) இடம்பெற்ற மீன்பிடித்துறைமுக விரிவாக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த நிகழ்வானது பெரியளவில் ஏற்பாடு செய்யப்படாமல் சாதாரண நிகழ்வாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
