யாழ். மாவட்ட செயலகத்தின் கடவுச்சீட்டு பணிமனை திறப்பு விழா- பேசுபொருளாக மாறிய விடயம்!

யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகை இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதன்படி யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு பணிமனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று (01) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான திரைநீக்க பலகையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது,

“பொதுமக்களது நிதியை பயன்படுத்தி மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் இன்று அனைவராலும் பாராட்டப்படும் விடயமாக மாறியுள்ளது.

அத்துடன் தமிழர் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை அளித்து திரைநீக்க பலகை அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாக பார்க்கப்படுகின்றது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply