இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பொலிஸார், இந்தோனேசியாவின் ஜகார்த்தா பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் உள்ளிட்டோர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களில் கெஹல்பத்தர பத்மே என்ற மந்தினு பத்மசிறி பெரேரா, பாணந்துரை நிலங்க என்ற நிலங்க சம்பத் சில்வா, கமாண்டோ சலிந்த என்ற சலிந்த மதுஷான் பெரேரா ஆகியோர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தெம்பிலி லஹிரு என்ற லஹிரு மதுசங்க மற்றும் பெக்கோ சமன் என்ற என்.என். பிரசங்க ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பில் கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில்,
மித்தெனிய – கண்டேவத்தை பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் மித்தெனிய – தொரகொலயாய பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் தங்களுக்குத் தெரிந்தே நடத்தப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
