ஜனாதிபதியின் செயலால் மக்கள் அதிருப்தி!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். மண்டைதீவில் நேற்றையதினம் (01) இடம்பெற்ற சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் சர்வமத தலைவர்கள் வரிசையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.

வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதியின் இந்த செயல் குறித்து தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டம் நடாத்தி வரும் நிலையில், அது தொடர்பில் கவனம் கொள்ளாது, ஜனாதிபதி செயற்பட்டமை காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அண்மையில் இடம்பெற்ற போது தையிட்டி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது. இதன்போது எதுவித பதிலும் பேசாது மௌனமாக இருந்த ஜனாதிபதி, விகாரைக்கு மாற்றுக் காணிகளை வழங்க துணை போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் காணி மக்களுக்கே என்றும் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்றும் பேசும் ஜனாதிபதி, அது தொடர்பில் உண்மையாகவே செயற்படுகிறாரா என காணி உரிமையாளர்கள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply