ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்- போக்குவரத்து தடை!

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (2) முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்லும் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆறு ​பேருக்கு ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply