சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (02) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் முதலான பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாகவுள்ள பகுதியில் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
