ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள் இன்று (02) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதன்படி இன்றையதினம் மிக நீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பாலப்புணரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாலப்புணரமைப்பு பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்

இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திர சேகர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply