கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு- நாட்டை விட்டு தப்பி சென்றுள்ள இஷாரா செவ்வந்தியை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை!

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் திணைக்களத்தின் திணைக்களத்திற்கு தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கொழும்பு குற்றப்பிரிவு இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இஷார செவ்வந்தி துபாய்க்கு தப்பிச் சென்றதாக கெஹல்பத்தர பத்மே பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, கொழும்பு குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply