பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மாயம்- கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சம்பவம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி மாளிகாவத்தை ரயில்வே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சிசுவின் உடலை ஒப்படைத்துள்ளனர்.

இந்தநிலையில் தெமட்டகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த சடலம் தொடர்பில் மரண பரிசோதனை நடத்துவதற்காக கடந்த 29 மற்றும் 31ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய மருத்துவமனை பிணவறைக்குச் சென்று விசாரித்தபோது, அதன் சடலம் அங்கிருந்து காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply