யாழ். மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சில நீதிபதிகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழி வழக்கை மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ். மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமையால், இந்த வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு வேகமாக நிறைவடைவதற்கு நீதிபதி ஆனந்தராஜா காட் டிய அக்கறையும், அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளுமே காரணமாயிருந்தது.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில், கிட்டத்தட்ட 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் குறித்த வழக்கை அவர் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் பதவி உயர்வுக்கான அனுபவம் மற்றும் தகுதியை நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
