ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த நிலையில் அதனை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு நேற்றையதினம் கொழும்பில் கூடிய வேளையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ஒத்திவைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழா இந்த மாதம் வேறு ஒரு நாளில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
