புகையிரதத்துடன் மோதி பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த 44 வயதுடைய உஷாநத் சங்கீதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரதம் பயணித்து கொண்டிருந்த வேளையில், குறித்த பெண் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன் போதே குறித்த பெண் புகையிரதத்துடன், கொடிகாம பகுதியில் மோதி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply