மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி கார் உதிரி பாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன்போது காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், இந்த ஆண்டில் 93 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 49 பேர் இறந்துள்ளதாகவும் மற்றும் 54 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
