சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பொருட்டு செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டம் நேற்றையதினம் (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போதே சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரித்தல், அதற்கு அவசியமான முடிவுகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்களை ஒருங்கிணைந்த கட்டமைப்பின் கீழ் செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன் போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
மேலும் எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை வெற்றிகரமாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர்களுடன் எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
