ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் மொரகந்த கொடவெவ பகுதியின் அருகே ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோ 755 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply