இன்று (04) நள்ளிரவு முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை பல கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது விடின் எதிர்காலத்தில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரமடையும் என்று கோசல அபேசிங்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
