இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நண்பகல் 12 மணி முதல் நிறைவுக்கு வந்துள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை அப்பதவியில் இருந்து நீக்கி, சுகாதார அமைச்சகத்துடன் இணைப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தத்தை இன்று நண்பகல் 12 மணி முதல் நிறைவுக்கு கொண்டுவர அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
