பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழப்பு!

யாழ். சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த வேளையில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய கேதீஸ்குமார் கார்த்திகேயன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த சிறுவன் கடந்த 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவர் அங்கு மயக்கமுற்றுள்ளார்.

எனினும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை மாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply