யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் போது இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவற்றில் 213 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 42 ஆவது நாளாக நேற்று யாழ். மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
