பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவுக்கு விளக்கமறியல்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply