கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்க வேண்டும் ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் B.ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த 43,000 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன
இந்த நிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் இந்த 43,000 குடும்பங்களில் 12,000 குடும்பங்களுக்கு மாத்திரமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன
ஏனைய 31,000 குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை
இவ்வாறு இழப்பீட்டு அலுவலகத்தினால் வழங்கப்படாமல் உள்ள இழப்பீட்டுத் தொகையை மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் .
இது தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும், இழப்பீட்டு அலுவலகத்தினுடைய தலைவர், இழப்பீட்டு அலுவலகத்தினுடைய பணிப்பாளர் நாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கின் இரண்டு அமர்வுகள் இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
