எல்ல பேருந்து விபத்து- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இரவு 9.00 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்றுள்ளது.

இதில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேளையிலேயே 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய பேருந்து தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்ளை பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து மீட்டனர்.

இந்த நிலையில் குறித்த பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply