இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போதே ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தனது மூன்று வயது மகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த அவர், நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது, தனது குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார்.
