இலங்கை – இத்தாலிக்கு இடையிலான முதல்சுற்று அரசியல் ஆலோசனை கூட்டம்!

இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மரியா த்ரிபோட்டி நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் இலங்கைக்கும், இத்தாலிக்கும் இடையிலான முதல்சுற்று அரசியல் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மரியா த்ரிபோட்டிக்கும், இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவிற்கும் இடையில் நேற்று (04) நடைபெற்றது.

அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்து வருடங்களின் பின்னர் இத்தாலியின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply