மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 35 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டம் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இங்கு ஒன்றுகூடிய மக்கள் மக்கள் காற்றாலை கணியமணல் போன்ற அழிவு திட்டங்கள் மன்னார் மாவட்டத்துக்குள் இனியும் வேண்டாம் என்று தெரிவித்தனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் ஜோசேவாஸ் கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் வவுனியா வேப்பங்குள கிராம மக்களும் அவர்களுடன் வெப்பங்குளம் பங்குதந்தை அருட்சகோதிரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் போது மக்கள் சிவப்பு நிற தலைப்பட்டிகளை அணித்து, பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
