கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களனியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (05) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் போது காயமடைந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
இந்த துப்பாக்கி சூட்டின் போது ரிவோல்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
