தனியார் வங்கிக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு- ஒருவர் காயம்!

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply