நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கி சூடு!

நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிதித் தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply