தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!

பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் விற்பனை நிலையம் ஒன்றினை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் விற்பனை நிலையத்தில் ஒரு பெண் இருந்தபோதிலும், துப்பாக்கித் தாக்குதல் விற்பனை நிலையத்தின் குளிர்சாதனப் பெட்டியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அலுபோமுல்ல பொலிஸார் மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply