எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு- தங்காலை நகர சபைக்கு எடுத்து வரப்பட்ட சடலங்கள்!

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து நேற்று (04) இரவு 9.00 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்றது.

விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் தங்காலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தங்காலை நகரசபையின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன.

விபத்தின் போது தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ. கே. ரூபசேன உட்பட நகர சபையின் 12 ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply