ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன்படி இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
