இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோரக் கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரக் கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கொழும்பிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை இருக்கும், அவ்வப்போது 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை இருக்கும்.

காலி முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படும். கொழும்பிலிருந்து காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply