பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த 2 நபர்கள் கைது!

பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடை ஆண் சந்தேக நபரும், கணேமுல்லவைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் சந்தேக நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply