பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை- கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியநீலாவணை 01ஆம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (07) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில், சந்தேகநபருக்குச் சொந்தமான வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply