தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு விவகாரம் இன்றையதினம் (08) பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி, பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
